மிகப்பெரிய கதாநாயகியாக நடித்திருக்க மாட்டார்கள்.. அதே சமயம் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்திருக்கும். அந்த படத்தின் மூலம் தங்களது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் ஒரு சில நடிகைகளும் இருக்கின்றனர். அப்படிப்பட்ட பட்டியலை சேர்ந்தவர் தான் நடிகை கோமல் சர்மா.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டப்படி குற்றம் என்கிற படத்தில் அறிமுகமான இவர், ஆர்கே நடிப்பில் வெளியான வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து நான்கு படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்றால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா ?
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரமாண்ட சரித்திர படமாக வெளியான மரைக்கார் படத்தில் அர்ஜுனின் மனைவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கோமல் சர்மா. அது மட்டுமல்ல தற்போது மோகன்லால் முதன் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கி வரும் பரோஸ் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கோமல் சர்மா.
இதில் என்ன ஹைலைட் என்றால் இந்த படத்தில் நடிக்கும் ஒரே இந்திய நடிகை, அதுவும் நம் தமிழ் நடிகை கோமல் சர்மா ஒருவர் மட்டும்தான். மோகன்லால் படங்களில் நடித்து வந்த சமயத்தில், உன்னுடைய திறமைக்கு மிகப்பெரிய ஆளாக வருவாய்.. நீ ஒரு இண்டர்நேஷனல் நடிகை என்று பாராட்டியுள்ளார். அவரது நான்கு படங்களில் தொடர்ந்து நடிக்கிறார் என்றால் திறமை இருக்கப்போய்த்தானே அப்படி பாராட்டியுள்ளார் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.