V4UMEDIA
HomeNewsKollywoodவெள்ளியன்று வெளியாகும் காபி வித் காதல் ஃபர்ஸ்ட் சிங்கிள்

வெள்ளியன்று வெளியாகும் காபி வித் காதல் ஃபர்ஸ்ட் சிங்கிள்

சமீபத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக நடித்த பட்டாம்பூச்சி திரைப்படம் வெளியானது.  சைக்கோ திரில்லராக உருவாகி இருந்த இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் தற்போது அவர் இயக்கி வரும் காபி வித் காதல் படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வரும் வெள்ளியன்று வெளியாக இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜெய் ஜீவா இவர்களுடன் ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த படம் கிட்டத்தட்ட உள்ளத்தை அள்ளித்தா பாணியில் இருக்குமென படக்குழுவினர் தங்களது எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளனர்

Most Popular

Recent Comments