V4UMEDIA
HomeNewsKollywoodமஹா தரிசனம் எப்போது தெரியுமா ?

மஹா தரிசனம் எப்போது தெரியுமா ?

ஹன்சிகா நடிப்பில் நீண்டகால தயாரிப்பில் இருக்கும் படம் என்றால் அது மஹா தான். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாக இந்த படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. இந்த படத்தை இயக்குனர் ஜமீல் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த படம் துவங்கிய சில நாட்கள் கழித்து சர்ப்ரைஸ் அறிவிப்பாக இந்தப்படத்தில் சிம்பு நடிக்கிறார் என்கிற தகவலை வெளியிட்டார்கள். முதலில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்று கூறியவர்கள் போகப்போக சிம்புவின் கதாபாத்திரத்தை அதிக நேரம் வரும்படியாக மாற்றி விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் எப்போது ரிலீசாகும் என்பதில் ஹன்சிகாவை விட சிம்பு ரசிகர்கள் ரொம்பவே ஆவலாக எதிர்பார்த்து வந்தனர். ஏற்கனவே ஜூன் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த தேதியில் சொன்னபடி படம் ரிலீசாகவில்லை

இந்த நிலையில் வரும் ஜூலை 22ஆம் தேதி இந்தப் படம் தமிழ் தெலுங்கில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தேதியை மாற்றாமல் எப்படியாவது படம் ரிலீஸ் ஆகி விட வேண்டும் என சிம்புவின் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Most Popular

Recent Comments