தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் பெயர் பெற்றவர் இயக்குனர் மிஸ்கின். அதுமட்டுமல்ல குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு நடிகராகவும் அவதாரம் எடுத்து அதிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்தார்.
பின்னர் பாடல்களை எழுதினார். தனது படங்களின் பின்னணி இசையில் உறுதுணையாக இருந்தார். தற்போது டெவில் என்கிற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் மாறியுள்ளார் மிஸ்கின். மிஸ்கின் நடித்த சவரக்கத்தி படத்தை இயக்கிய ஆதித்யா தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் இந்த படத்தில் பூர்ணா, ஆதித் அருண் ஆகியோர் உடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. இவர்களுடன் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார். மாறா, குதிரைவால் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துகுமார் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.