தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனா. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த மீனா, கடந்த 2009-ல் சினிமாவிற்கு துளியும் சம்பந்தமில்லாத பெங்களூரைச் சேர்ந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு நைனிகா என்கிற மகளும் இருக்கிறார்.
கடந்த வருடம் மீனாவுக்கும் அவரது கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது அப்போது அதிலிருந்து இருவருமே மீண்டு வந்தனர். இருந்தாலும் வித்யாசாகருக்கு அதன்பிறகு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குறிப்பாக நுரையீரல் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார். இந்த செய்தி அறிந்ததும் திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களும் மிகுந்த அதிர்ச்சியடைந்து உள்ளதுடன் தங்களது வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்