கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தென்னிந்திய திரையுலகில் வெளியான தெலுங்கு படமான ஆர்ஆர்ஆர் மற்றும் கன்னட படமான கேஜிஎப் ஆகியவற்றின் பிரம்மாண்ட வசூல் குறித்து மிகப்பெரிய அளவில் சிலாகித்துப் பேசி வந்தனர். தமிழ் ரசிகர்கள் அனைவரும் இந்த படங்களின் வசூலை முறியடிக்கும் தமிழ் சினிமாவில் ஒரு படம் இல்லையா என்கிற ஏக்கம் கொள்ளும் அளவிற்கு சூழல் இருந்தது.

இந்த நிலையில் கடந்த ஜூன் மூன்றாம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி பஹத் பாசில் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்த விக்ரம் திரைப்படம் வெளியானது. வெளியான நாளிலிருந்து இன்றுவரை பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது விக்ரம்.

அதுமட்டுமல்ல சுமார் 150 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் தற்போது 400 கோடி ரூபாய் வசூல் என்கிற இலக்கை தொட்டுள்ளதுடன் மேலும் திரையிடப்பட்ட திரையரங்குகள் அனைத்திலும் நல்ல லாபம் கொடுத்துள்ளதாக விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் தமிழகத்தில் கேஜிஎஃப்-2 ஆர் உள்ளிட்ட மற்ற மொழிப் படங்களின் வசூல்களை எல்லாம் ஓவர்டேக் செய்து நம்பர் ஒன் இடத்தை பிடித்துவிட்டது விக்ரம்.