V4UMEDIA
HomeNewsKollywoodதனுஷின் தாய்க்கிழவி பாடலுக்கு விளக்கம் கிடைத்தது

தனுஷின் தாய்க்கிழவி பாடலுக்கு விளக்கம் கிடைத்தது

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் கதாநாயகிகளாக நித்யா மேனன், ராசி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் என மூன்று பேர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் தாய்க்கிழவி என்கிற முதல் லிரிக் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத், நடன இயக்குனர் சதீஷ் மற்றும் இந்த தாய்க்கிழவி என்கிற வார்த்தையை நாட்டாமை படத்தில் பேசி பிரபலப்படுத்திய பொன்னம்பலம் ஆகியோர் இந்த பாடல் குறித்த ஒரு புரோமோவை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்த பாடல் வெளியாகி யூடியூபில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது/ இந்த பாடலில் தனுஷும் நித்யா மேனனும் நடித்துள்ளனர்.

எதற்காக இந்த பாடலுக்கு தாய்க்கிழவி என பெயர் வைத்தார்கள் என்பது இந்த பாடல் வரிகளை கேட்கும்போது தான் தெரிகிறது. இந்த பாடலில் முக்காத்துட்டு கப்பக்கிழங்கே, அக்கா பெத்த அச்சுமுறுக்கே, அவ அன்புள்ள தாயி, புத்தியில கிழவி.. மொத்தத்துல அவதான் தாய்க்கிழவி என்கிற பாடல் வரிகள் ரசிகர்களின் சந்தேகத்தை தீர்த்து வைத்து விட்டன.

Most Popular

Recent Comments