சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் என இரண்டு உச்ச நட்சத்திரங்களையும் வைத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இரண்டு ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். அதுமட்டுமல்ல குடும்பப்பாங்கான கமர்சியல் படங்களை தருவதற்கு பெயர் போனவர். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள கே.எஸ் ரவிக்குமார், ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் லாரன்ஸின் தம்பி எல்வினும் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.
தற்போது லாரன்ஸ் பி,வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 மற்றும் அதிகாரம், இதுதவிர கதிரேசன் இயக்கத்தில் ருத்ரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் இதில் ருத்ரன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்தநிலையில் கே.எஸ் ரவிக்குமாரின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடிக்க துவங்கியுள்ளார் லாரன்ஸ். இந்த படம் மூலம் லாரன்ஸின் தம்பி எல்வினுக்கும் திரையுலகில் ஒரு புதிய பாதையை கே.எஸ்.ரவிக்குமார் போட்டுத் தருவார் எதிர்பார்க்கலாம்