விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் டி.இமான். இந்த இருபது வருடங்களில் தமிழ்சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரின் படங்களுக்கும் இசையமைத்து விட்டார்.. அதேபோல இதுவரை 150 க்கும் மேற்பட்ட புதிய குரல்களை எனது இசையில் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அவர்களில் 80 சதவீதத்திற்கும் மேல் தமிழர்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொச்சிப்பட்டியைச் சேர்ந்த கண் பார்வை தெரியாத திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் வரும் ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடும் வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்து. அவரை கூட்டி வந்து சீறு, அண்ணாத்தே ஆகிய படங்களில் பாட வைத்தார் இமான்.
வைக்கம் விஜயலட்சுமியை என்னமோ ஏதோ படத்தில் புதிய உலகை ஆள போகிறேன் என்ற பாடல் மூலம் முதல் ஆளாக தமிழில் பட வைத்தார்.
வேடந்தாங்கல் கிராமத்தில் புத்தர் கலை குழுவில் பறை இசைத்து கிராமிய பாடல்கள் பாடிக்கொண்டு இருந்த நாட்டுப்புற பாடகரான மகிழினி தமிழ்மாறனை கும்கி படத்தின் கையளவு நெஞ்சத்துல பாடல் முலம் திரைக்கு அறிமுகப்படுத்தினர். வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்துல ஊதா கலரு ரிப்பன் பாடல் மூலம் ஹரி ஹர சுதன் அறிமுகப்படுத்தினார்..
நாட்டுப்புற பாடகரான செந்தில் கணேஷை சீமாராஜா படத்தில் பயன்படுத்தி இருப்பார்.. இப்படி திறமையானவர்களை அடையாள படுத்தும் இமானின் பட்டியலில் தற்போது புதிதாக சேர்த்து இருப்பவர் ஸ்வஸ்திகா சுவாமிநாதன்
இது குறித்து இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வளர்ந்து வரும் பாடகரான ஸ்வஸ்திகா சுவாமிநாதனின் ஆத்மார்த்தமான குரலில் யுக பாரதி வரிகளில் உருவாகி உள்ள அணையா விளக்கு பாடலை தான் இசையில் விரைவில் வெளியாக இருக்கும் பப்ளிக் திரைப்படத்தில் கேட்க ஆவலுடன் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.