தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருட காலம் காமெடியில் கொடிகட்டி பறந்தவர்கள் கவுண்டமணியும் செந்திலும். இவர்கள் நடித்துள்ள படங்கள் என்றால் நம்பி போகலாமென ஒரு கால கட்டத்தில் ரசிகர்கள் தியேட்டருக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு குறிப்பாக கடந்த பத்து வருடங்களாக கவுண்டமணியும் செந்திலும் நடிப்பிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர்.
இந்தநிலையில் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு தற்போது நடிகராக திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். தற்போது பாபி சிம்ஹா நடித்து வரும் தடை உடை என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மணிகண்ட பிரபு.
அனேகமாக தந்தையை போல நகைச்சுவை ரூட்டில் இவர் பயணிப்பார் என்பது தெரிகிறது. இந்த படத்தில் இவரது தந்தை செந்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.