கடந்த இரண்டு வருடங்களாக சோசியல் மீடியாவில் பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி என்பவர் திரைப்பட பாடல்களை பாடி தனது குரலால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் இமான் இவரை அழைத்து பாராட்டி தனது இசையில் பாட வைத்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் இருந்து அனிருத் இசையமைப்பில் உருவான பத்தல பத்தல என்கிற பாடலை திருமூர்த்தி தாளம் போட்டுக்கொண்டே பாடிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆனது இந்த வீடியோ கமலின் கவனத்திற்கும் சென்றது.

இதை அடுத்து திருமூர்த்தியை நேரில் வரவழைத்து பாராட்டிய கமல் அவரது இசை ஆர்வம் குறித்து கேட்டறிந்தார். திருமூர்த்திக்கு இசைக்கலைஞர் ஆகும் ஆர்வம் இருப்பதால் அதற்காக இன்னும் இசை பயிற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய கமல் உடனே ஏ.ஆர் ரகுமானுக்கு போன் செய்து திருமூர்த்தி பற்றி கூறி அவரை அவரது இசைப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறும் அதற்கு ஆகும் மொத்த செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார்

அதற்கு சம்மதித்த ஏ.ஆர் ரகுமான் உடனடியாக திருமூர்த்தி தம் இசை பள்ளியில் சேர்த்துக் கொள்வதாக வாக்களித்துள்ளார். கமலின் இந்த செயல் நெட்டிசன்கள் ஆல் பாராட்டப்பட்டு வருகிறது