தனுஷ் ,நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் திருச்சிற்றம்பலம். எப்படி யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களை தொடர்ந்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறாரோ அதேபோல ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் இந்த திருச்சிற்றம்பலம் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு இவர்கள் கூட்டணி சேர்ந்திருப்பதால் இன்னும் ஒரு கொலவெறி பாடல் போன்ற ஒரு மாஸ் பாடலை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/06/thaai-kezhavi-2.jpg)
அதற்கேற்ற வகையில் அந்தப்பாடலும் தயாராகிவிட்டது தற்போது வெளியாகியுள்ள புரோமோ கோவில் நன்றாகவே தெரிகிறது தாய்க்கிழவி எனத் துவங்கும் இந்த பாடலை தனுஷ் எழுதி இருக்கிறார் இந்த பாடல் வரும் ஜூன் 24ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இது குறித்த புரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது .
நாட்டாமை படத்தில் வில்லன் பொன்னம்பலம் பேசும் தாய்க்கிழவி எல்லாத்தையும் கேட்டுட்டியா என்கிற டயலாக் ரொம்பவே பேமஸ். அந்த தாய்க்கிழவி என்கிற வார்த்தையை வைத்து இந்த பாடலை உருவாக்கியுள்ளார்கள் தனுஷும் அனிருத்தும்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/06/thaai-kezhavi-1.jpg)
அதுமட்டுமல்ல இந்த பாடலுக்கு இசை நடனம் அமைக்கும் சதீஷ் வந்து பாட்டை போட்டு காட்டும்படி சொல்ல திடீரென எதிர்பாராத விதமாக இந்த வசனத்தை பேசிய பொன்னம்பலமே வந்து சதீசை கார்னர் செய்வதாக இந்த புரோமோ உருவாக்கப்பட்டுள்ளது. பாடலும் இதே போல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.