V4UMEDIA
HomeNewsKollywoodவிஜய்சேதுபதியின் பலத்தையும் பலவீனத்தையும் வெளியிட்ட விக்ரம் படக்குழு

விஜய்சேதுபதியின் பலத்தையும் பலவீனத்தையும் வெளியிட்ட விக்ரம் படக்குழு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பஹத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியுடன் வெளியான படம் விக்ரம். கடந்த ஜூன் மூன்றாம் தேதி வெளியான இந்த படம் தற்போது வரை தியேட்டர்களில் வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

அது மட்டுமல்ல தமிழ் சினிமாவில் அதிகபட்சம் வசூலித்த படம் என்கிற புதிய சாதனையையும் இந்தப்படம் படைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு கமல் மட்டுமல்லாது நடிகர்கள் விஜய்சேதுபதி மற்றும் பஹத் பாசில் இருவரும் மிக முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

குறிப்பாக விஜய்சேதுபதியின் நகைச்சுவை கலந்த சீரியஸான வில்லத்தனம் படத்திற்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. இந்த படத்தில் விஜய்சேதுபதியின் குடும்பத்தைச் சேர்ந்த 67 பேர் தான் அவரது பலம் என்றும், அதேசமயம் அவர்கள் தான் அவரது பலவீனம் என்பது போன்றும் அவர்களுக்காகவே சில இடங்களில் விஜய்சேதுபதி பணிந்து போவது போன்றும் அவரது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த 67 பேர் கொண்ட குடும்ப புகைப்படத்தை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த படத்திற்கு சந்தனத்தின் பலமும் பலவீனமும் என அடைமொழியும் கொடுத்துள்ளனர். படத்தில் விஜய்சேதுபதி சந்தனம் என்கிற கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments