பாட்ஷா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பராக நடித்த நடிகர் சரண்ராஜை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அந்த படத்தில் மட்டுமல்ல சூப்பர் ஸ்டார் ரஜினியின் பல படங்களில் அவரது நண்பராக நடித்தவர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும் நடித்தவர் நடிகர் சரண்ராஜ்.

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இயக்குனராக புதிய அவதாரம் எடுத்து அந்த படத்தில் தனது மகன் தேவ் சரண்ராஜை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியுள்ளார் சரண்ராஜ்.

இந்த படத்திற்கு குப்பன் என டைட்டிலும் வைத்துள்ள சரண்ராஜ், இந்த டைட்டிலை வைத்ததற்கு ஒரு வித்தியாசமான காரணத்தையும் தற்போது கூறியுள்ளார்.
“35 வருஷமா பாலவாக்கத்தில இருக்கேன். தினமும் நாயை கூட்டிட்டு கடற்கரை வழியா வாக்கிங் போவதுண்டு. அப்போ பல பேர் பழக்க மாகி அங்கு அரட்டை அடிச்சிட்டு தான் வீட்டுக்கு வருவேன். அப்படிதான் குப்பன் என்ற ஃபிஷர்மேன் பழக்கமாச்சி. அப்போ தான் தோணிச்சு.. ஒரு ஃபிஷர்மேன் கதையை நாம ஏன் எழுத கூடாதுன்னு. கதை எழுதி முடிச்சதும் நண்பர் பெயரையே தலைப்பாக வெச்சுட்டேன். அதுதான் “குப்பன்”. அவரும் இதில் சின்ன கேரக்டரில் நடித்துள்ளார்” என்கிறார் சரண்ராஜ்.

இன்னொரு நாயகனாக ஆதி தேவ் அறிமுகமாகிறார். இவர்களுடன் சுஷ்மிதா சுரேஷ், பிரியதர்ஷினி அருணாசலம் நாயகிகளாக அறிமுகமாகுகிறார்கள். மேலும் சரண்ராஜும் நீண்ட நாள்களுக்கு பின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மகன் தேவ் சரண்ராஜின் மாமனாக சரண்ராஜ் நடித்து வருகிறார். ஒரு குப்பத்து மீனவ இளைஞனுக்கும் மார்வாடி பெண்ணுக்கும் நடக்கும் காதல் கதை தான் இந்தப்படம். என கதையின் உன்னையும் இப்போதே வெளிப்படுத்தி விட்டார் சரண்ராஜ்