நீண்ட காலமாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஒரு கூட்டணி தான் அருண் விஜய்யும் அவரது மைத்துனர் இயக்குனர் ஹரியும் இணைந்துள்ள புதிய கூட்டணி. இவர்கள் இருவரும் இணைந்து உருவாகியுள்ள யானை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது.
இந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதியே இந்த படம் வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் கமலின் விக்ரம் படம் வெற்றிகரமாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுவதால் இந்த படத்திற்கு அந்த சமயத்தில் எதிர்பார்த்த தியேட்டர்கள் கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து படத்தை ஜூலை 1ஆம் தேதிக்கு மாற்றி வைத்து புதிய ரிலீஸ் தேதியை அறிவித்தனர். இருந்தாலும் முதல் ரிலீஸ் தேதிக்கு முன்பாகவே இயக்குனர் ஹரியும் அருண்விஜய்யும் பல ஊர்களுக்கு சென்று அங்குள்ள தியேட்டர்களுக்கு விசிட் அடித்து ரசிகர்களுடன் உரையாடி யானை படத்திற்கு புரமோஷன் செய்துவந்தனர்.
இந்த நிலையில் தற்போது யானை படத்திற்காக எல்சிடி திரை கொண்ட வாகனங்களை புரமோசனின் இன்னொரு பகுதியாக கொடி அசைத்து வழி அனுப்பி வைத்துள்ளனர்
இயக்குனர் ஹரியும் அருண்விஜய்யும் பட்டிதொட்டியெல்லாம் பயணிக்கும் இந்த யானை ஒட்டுமொத்த ரசிகர்களையும் தியேட்டருக்கு அழைத்து வரும் என நம்பலாம்.