அசோக் செல்வன் நடிப்பில் வரும் ஜூன் 24ஆம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் வேழம். இந்த படத்தை சந்தீப் ஷியாம் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகிகளாக ஜனனி அய்யர், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/05/vezham-1-1-763x1024.jpg)
இந்த படத்தின் மூலம் ஜானு சுந்தர் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இவர் ஏற்கனவே காலா, பைரவா போன்ற படங்களில் கிடாரிஸ்டாக பணிபுரிந்தவர்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/06/VEZHAM-1-1-1024x682.jpg)
அதுமட்டுமல்ல இவர் படத்தின் இயக்குனர் சந்தீப் ஷியாமின் பள்ளித் தோழர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுப்பிரமணியபுரம் படத்தில் இயக்குனர் சசிகுமார் எப்படி தன் பள்ளி ஆசிரியரான ஜேம்ஸ் வசந்தனை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினாரோ, அதேபோல இந்த படத்தில் இயக்குனர் சந்தீப் ஷியாம் தனது பள்ளி நண்பரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளது ஆச்சரியமான ஒன்றுதான்.