V4UMEDIA
HomeNewsKollywoodஊர்க்குருவியால் பருந்தாக மாறமுடியும் ; விஜய்சேதுபதி வெளியிட்ட போஸ்டர்

ஊர்க்குருவியால் பருந்தாக மாறமுடியும் ; விஜய்சேதுபதி வெளியிட்ட போஸ்டர்

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்கிற பழமொழி ஒன்று உண்டு. ஆனால் பருந்தாகுது ஊர்க்குருவி என்கிற டைட்டிலில் உருவாகிறது ஒரு படம். இயக்குனர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய கோ.தனபாலன் இந்த படத்தின் கதையை எழுதி இயக்குகிறார்

வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒருபோதும் நிலைக்காது என்கிற கருத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. ஒரு காட்டில் இரண்டு நண்பர்கள் மாற்றிக் கொள்கின்றனர் அதிலொரு நண்பரை இன்னொரு நண்பர் எப்படி போராடி காப்பாற்றுகிறார் என்பதை ஒரேநாளில் நிகழும் பரபரப்பு சம்பவங்களாக இந்த படம் உருவாகியுள்ளது.

நிஷாந்த் ரூஸோ, விவேக் பிரசன்னா இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க மும்பை மாடல் காயத்ரி ஐயர் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

வித்தியாசமான புதிய முயற்சிகளுக்கு எப்போதுமே ஊக்கம் தரும் விஜய் சேதுபதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் வாழ்த்தியுள்ளார்

Most Popular

Recent Comments