சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கமலுடன் நடிகர்கள் விஜய்சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியும் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட திறமையான தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்து இந்த படத்தை வெற்றிப்படமாக மாற்றியுள்ளனர்.

மிகப்பெரிய அளவில் வசூலை வாரியுள்ள இந்த படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்காக திரையுலகைச் சேர்ந்த பலரும் கமலை நேரிலும் சோசியல் மீடியா மூலமும் பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவராக திகழும் ஷோபி மாஸ்டர் தனது மனைவி மற்றும் மகளுடன் கமலை நேரில் சந்தித்து விக்ரம் படத்திற்கான தங்களது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் குருநாதர் என்கிற முறையில் அவரது ஆசீர்வாதத்தையும் பெற்றனர்.

கமல் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்கிற படத்தின் மூலம் தான் ஷோபி மாஸ்டர் நடன இயக்குனராக அறிமுகமானார். அடிப்படையில் கமலும் ஒரு டான்ஸ் மாஸ்டர் என்கிற விதத்தில் அவரை குருநாதராக மதித்து கர்ப்பமாக உள்ள தனது மனைவியுடன் வந்து நேரில் சந்தித்து ஆசிகளும் பெற்றுள்ளார் ஷோபி மாஸ்டர்.

அவரது மனைவி கர்ப்பமாக உள்ள செய்தியை அறிந்த கமல் ஷோபி மாஸ்டரின் மனைவியிடம் அக்கறையாக நலம் விசாரித்து உடல்நிலையை கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.