கொரோனா தாக்கம் நிலவி வந்த காலகட்டத்தில் மற்ற பல நடிகர்களின் படங்கள் தியேட்டர்களில் வெளியாக முடியாமல் தவித்து வந்தன. ஆனால் அந்த சமயத்தில் சசிகுமார் நடித்த எம்ஜிஆர் மகன், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட சில படங்கள் ஒடிடி தளத்திலேயே வெளியாகின. ஆனாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் சசிகுமாரின் நடிப்பில் கிராமம், நகரம் இரண்டும் கலந்த ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள படம் காரி.

இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடித்துள்ளார். கதாநாயகியாக பார்வதி அருண் என்பவர் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் மோகன்லால் மகன் பிரணவ் நடித்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு, செம்பருத்தி பூ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர்களுடன் நாகிநீடு, ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதை பார்க்கும்போது இந்தப்படம் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளது போல தெரிகிறது.

குறிப்பாக சசிகுமார் ஜல்லிக்கட்டு காளை ஆகவும் வில்லன் ஜேடி சக்கரவர்த்தி பந்தயக்குதிரை ஆகவும் உருவகப்படுத்தப் பட்டுள்ளார்கள் என்று தெரிகிறது.
நீண்ட நாளைக்கு பிறகு நிச்சயமாக ஒரு அக்மார்க் சசிகுமார் படமாக காரி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.