V4UMEDIA
HomeNewsKollywoodதிக் திக் திவ்யா ; அறிமுகம் இல்லாத நபர்களுடன் சுற்றி பார்க்க ஆசைப்படும் இளம்பெண்

திக் திக் திவ்யா ; அறிமுகம் இல்லாத நபர்களுடன் சுற்றி பார்க்க ஆசைப்படும் இளம்பெண்

மலையாள திரையுலகில் வருவதுபோல இன்வெஸ்டிகட் திரில்லர் படங்கள் தமிழில் பெரிய அளவில் வெளியாவதில்லை. ஆனால் இது போன்ற படங்களுக்கு தான் ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். காரணம் படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரை ரசிகர்களை ஒருவித பரபரப்பிலேயே இந்த படங்கள் வைத்திருக்கும். அப்படி ரசிகர்களின் ஏக்கத்தை போக்கும் விதமாக உருவாகியுள்ள படம்தான் திவ்யா

புதுப்புது இடங்களுக்குப் போகவேண்டும், இதுவரை சந்திக்காத மனிதர்களுடன் பழக வேண்டும்… என்று தன்னந்தனியாகவே சுதந்திரப் பறவையாக சுற்றித்திரியும் இளம்பெண் திவ்யா.

திவ்யாவும் அவளது நண்பனும் இதுவரை பார்க்காத ஒரு இடத்திற்கு பயணம் செய்கிறார்கள். அறிமுகமில்லாத இடம், அறிமுகமில்லாத மனிதர்கள்… எதிர்பாராத ஒரு சம்பவம்…

அது எந்த இடம்.. அது என்ன சம்பவம்… அந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது தான், “திவ்யா”வின் கதை.

சாஸ்வி பாலா, மிதுன், சம்பத் ராம், மேத்யூ வர்க்கீஸ், பிரவின், அகில் கிருஷ்ணஜித் முருகன் ஆகியோர் நடிப்பில், விபின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரெஜிமோன் இசையமைப்பில் பாடல்கள், மற்றும் வசனத்தை முருகன் மந்திரம் எழுதி இருக்கிறார்.

வழக்கமான பாணியில் இல்லாது, மிக வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகியுள்ள திவ்யா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் “திவ்யா” படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலர் வெளியாக இருக்கிறது.

Most Popular

Recent Comments