தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், மாறன் மற்றும் இந்தியில் அவர் நடித்த கலாட்டா கல்யாணம் ஆகிய மூன்று படங்களும் கொரோனா தாக்கம் மற்றும் சில காரணங்களால் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்திலேயே வெளியானது. அதனாலோ என்னவோ இந்த மூன்று படங்களும் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற தவறிவிட்டன.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/06/thiruchitrambalam-release-1-935x1024.jpg)
அதற்கு முன்னதாக திரையரங்குகளில் வெளியான கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டு வருடங்கள் கழித்து தற்போது தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அதுவும் தனுஷ் பிறந்த நாளான ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது தான் இதில் ஹைலைட்.
தனுஷை வைத்து ஏற்கனவே யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் நான்காவது முறையாக தனுஷுடன் கைகோர்த்துள்ள படம் இது. அதனாலேயே இந்த படமும் முந்தைய மூன்று படங்களை போல ரசிகர்களின் மனதுக்கு பிடித்த படமாக இருக்கும் என ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/06/thiruchitramblam-priya-823x1024.jpg)
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/06/thiruchitramblam-nithya-menon-826x1024.jpg)
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/06/thiruchitramblam-raashi-khanna-823x1024.jpg)
இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக ரசிகர்களை ஏதோ ஒரு வகையில் திருப்திப்படுத்த தவறிய தனுஷ், இந்த படத்தில் அவர்களுக்கு ஃபுல் மீல்ஸ் விருந்தளிப்பார் என உறுதியாக நம்பலாம்.