இந்த வருடம் கார்த்தியின் வருடம் என்று சொல்வதற்கு தகுந்தாற்போல விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் என கார்த்தி நடித்துள்ள மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இதில் கார்த்தி நடிப்பில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் படம் என்றால் அது சர்தார் தான்.
இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பிஎஸ் மித்ரன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஏற்கனவே கார்த்தியின் வயதான கெட்டப், போலீஸ் அதிகாரி கெட்டப் என படம் வெளியாகும்போது நம்மை ஆச்சரியப்படுத்த கூடிய பல அம்சங்கள் இருப்பதாக தெரிகிறது.
அதுமட்டுமல்ல படத்தின் வில்லனும் கூட மிரட்டலாக இருக்க வேண்டும் என்பதற்காக பாலிவுட்டிலிருந்து சங்கி பாண்டே என்கிற நடிகரை அழைத்து வந்துள்ளார்கள். இந்த படத்தின் கதையும் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் திறப்பது போல எழுதப்பட்டுள்ளது.
அந்த வகையில் இதுவரை படப்பிடிப்பே நடத்தப்படாத அசர்பைஜான் நாட்டின் பாராளுமன்றத்தில் வில்லன் சங்கி பாண்டே சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர். மேலும் ஜார்ஜியாவிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த காட்சிகளுக்கு மட்டுமே 4 கோடி ரூபாய் செலவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் தீபாவளி ரிலீசாக வெளியாக இருக்கிறது..