சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி கிட்டத்தட்ட 804 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்று மொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்த படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கிய இந்த படம் நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு என பலருக்கும் அவர்களது அடுத்த கட்டத்தை நோக்கி நகர உதவிய படமாக அமைந்தது.

பாபா படத்தின் தோல்விக்கு பிறகு நான் யானை அல்ல குதிரை என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிரூபிக்க உதவிய படம் சந்திரமுகி. இந்த படம் வெளியாகி சில வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா என்கிற கேள்வி இப்போது வரை ஓடிக்கொண்டே இருந்தது. இயக்குநர் பி வாசு கூட கன்னடத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்து விட்டார். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி இந்த இரண்டாம் பாகத்தில் படத்தில் நடிக்க முடியாத ஒரு சூழல் நிலவியது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார் என ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகி இருந்தது. தற்போது அந்த தகவல் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியாகி உள்ளது. ஆம்..

சந்திரமுகி 2 திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க நடிக்கிறார் லாரன்ஸ். சந்திரமுகி படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுத்த இயக்குனர் பி.வாசு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஆர்ஆர்ஆர், பாகுபலி ஆகிய படங்களுக்கு இசையமைத்த மரகதமணி இசையமைக்கிறார்.

இதையெல்லாம் விட முக்கியமான அம்சமாக முதல் பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து காமெடியில் கலக்கிய வடிவேலு, இந்த இரண்டாம் பாகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பி.வாசு ஏற்கனவே லாரன்ஸ் நடித்த சிவலிங்கா என்கிற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது