விக்ரம் படத்தின் வெற்றி மூலம் கமல் ஏதோ புதிதாக பிறந்தவர் போன்றே ஒரு மிகப்பெரிய தோற்றம் ஏற்பட்டுள்ளது. காரணம் ஒரு காலத்தில் அதாவது சில வருடங்களுக்கு முன்பு வரை அவரது படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. கமல் ரஜினி என்கிற இருமுனை போட்டி வலுவாக இருந்தது.
அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சின்னத்திரை சென்ற கமல், கூடவே தேர்தல் அரசியலில் இறங்கி திசை மாறினார். இதனால் இனி கமல் சினிமாவில் அவ்வளவுதான் என்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டதை மறுக்க முடியாது, ஆனால் அதை எல்லாம் அடித்து உடைப்பது போல விக்ரம் படம் மூலம் மீண்டு(ம்) வந்துள்ளார் கமல்.

இந்த படத்தின் வெற்றி கமலின் இடத்தை யாராலும் அசைக்க முடியாது என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறது. கமலின் வெற்றியை திரையுலக பிரபலங்கள் பலரும் கொண்டாடி வரும் நிலையில் கமலின் நீண்ட கால நண்பரும் தெலுங்கு திரையுலகின் சீனியர் ஹீரோவுமான சிரஞ்சீவி கமலையும் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜையும் ஆந்திராவில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்து விருந்து அளித்து கௌரவித்து உள்ளார்.

இந்த நிகழ்வின்போது பாலிவுட் நடிகர் சல்மான்கானும் கலந்துகொண்டு கமலுக்கு தந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.. சிரஞ்சீவி தெலுங்கில் பிசியான ஹீரோவாக மாறுவதற்கு முன்பு அவரது அறிமுக காலகட்டத்தில் கே பாலசந்தர் இயக்கத்தில் 47 நாட்கள் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்,

அதுமட்டுமல்ல தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி கமல் இணைந்து நடித்த ‘அவர்கள்’ படம் தெலுங்கில் ரீமேக் ஆனபோது அதில் ரஜினி கதாபாத்திரத்தில் சிரஞ்சீவியும் கமலுடன் சேர்ந்து நடித்து இருந்தார். அந்தவகையில் கிட்டத்தட்ட 40 வருடத்திற்கு மேலான நட்பு இவர்கள் இருவருக்குமானது. அது இப்போதுதான் நன்றாக வெளிப்பட்டுள்ளது. இதனை இதனை இரு தரப்பு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.