Home News Kollywood கமலுடன் அருண்விஜய்-ஹரி சந்திப்பு பின்னணி இதுதான்  

கமலுடன் அருண்விஜய்-ஹரி சந்திப்பு பின்னணி இதுதான்  

அருண்விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் ஜூன் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த படம் யானை.. என்னதான் தனது நெருங்கிய உறவினர் என்றாலும் இதுவரை அருண்விஜய்யை வைத்து ஹரி படம் இயக்கியது இல்லை. ஆனால் கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் சூழல் தானாக அமைந்துள்ளது.

இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து புரமோஷன் பணிகள் துவக்கப்பட்டு படம் ஜூன் 17ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் சற்று தள்ளி போகிறது என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்று கமல்ஹாசனை நேரில் சந்தித்து விக்ரம் படத்தின் வெற்றிக்காக அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் இயக்குனர் ஹரியம் நடிகர் அருண்விஜய்யும். வாழ்த்து சொல்வதற்காக தான் கமலை நேரில் சந்திக்க சென்றார்கள் என சொல்லப்படும் காரணம் உண்மைதான் என்றாலும் கடந்த வாரம் வெளியான கமலின் விக்ரம் படம் இப்போதும்கூட தியேட்டர்களில் வரவேற்பு குறையாமல் ஓடிக்கொண்டிருப்பதால் யானை படத்திற்கு இந்த வாரம் போதிய அளவு தியேட்டர்கள் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை மனதில் கொண்டு விக்ரம் படத்தின் ஓட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டாம் என்கிற எண்ணத்திலும், தங்களது படமும் அதிக அளவிலான தியேட்டர்களில் வெளியான வந்தால் சிறப்பாக இருக்கும் என்கிற எண்ணத்திலும் இருந்தனர் இவர்கள் இருவரும். அதனால் கமலை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் தங்களது தரப்பையும் கமலிடம் விளக்கிவிட்டு வந்துள்ளதாக சொல்லப்படுகின்றது.