V4UMEDIA
HomeNewsKollywoodவிக்ராந்தின் தீபாவளி போனசை வெளிச்சம் போட்டு காட்டிய வடிவேலு

விக்ராந்தின் தீபாவளி போனசை வெளிச்சம் போட்டு காட்டிய வடிவேலு

விஜய்யின் சகோதரர் என்கிற லேபிளுடன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நுழைந்தவர் நடிகர் விக்ராந்த். இருந்தாலும் இன்னும் தமிழ் சினிமாவில் நிலையான ஒரு இடத்தைப் பிடிக்க முடியாமல் போராடிக் கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் அறிமுக இயக்குனர் ஜெயபால் என்பவரது டைரக்ஷனில் விக்ராந்த் கதாநாயகனாக நடித்துள்ள படம் தீபாவளி போனஸ். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்விகா நடித்துள்ளார். மரிய ஜெரால்டு என்பவர் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை வைகைப்புயல் வடிவேலு வெளியிட்டு இந்த படத்திற்கு வெளிச்சம் கொடுத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டரை வடிவேலு வெளியிட்டதில் இன்னொரு சென்டிமென்டான ஆச்சரிய தகவலும் உண்டு.

விக்ராந்த் கதாநாயகனாக முதன்முதலில் அறிமுகமான கற்க கசடற படத்தில் அவருடன் இணைந்து படம் முழுவதும் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் வடிவேலு தான் நடித்திருந்தார். வடிவேலுவின் நகைச்சுவையில் விக்ராந்த்தும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆனார் என்பது மறுக்க முடியாத உண்மை.

Most Popular

Recent Comments