V4UMEDIA
HomeNewsKollywoodஏ.ஆர் ரகுமான் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர்

ஏ.ஆர் ரகுமான் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர்

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் மகள் கதீஜா மற்றும் ரியாசுதீன் ஆகியோரது திருமணம் கடந்த ஜூன் 6ஆம் தேதி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தனது நண்பர்கள் வட்டாரம் திரையுலக பிரபலங்கள் ஆகியோருக்காக இன்று மிகப்பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் ஏ.ஆர் ரகுமான்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின். மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்திலும் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது ஏ.ஆர்.ஆர் பிலிம் சிட்டியில் நடைபெற்ற ஏ.ஆர் ரகுமான் மகள் கதீஜா மற்றும் ரியாசுதீன் ஆகியோரது திருமண வரவேற்பில் கலந்துகொண்டு மணமக்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.. மேலும் பலரது மனங்களை தனது இசையால் இணைத்து வரும் ஏ.ஆர் ரகுமானுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நன்றி கூறியுள்ள ஏ.ஆர் ரகுமான், “நமது சுறுசுறுப்பான தமிழக முதல்வர் எனது மகள் கதீஜா திருமணத்திற்கு தனது மனைவி மற்றும் மருமகளுடன் வந்து மணமக்களை ஆசீர்வதித்ததில் மிகவும் மகிழ்ச்சி. எங்களது இந்த குடும்ப நிகழ்வை மேலும் அவர் சிறப்பானதாக மாற்றியுள்ளார்” என்று தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Most Popular

Recent Comments