தனுஷ் நடிப்பில் யாரடி நீ மோகினி என்கிற எவர்கிரீன் ஹிட் படத்தையும் அதைத்தொடர்ந்து குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களையும் அடுத்தடுத்து இயக்கியவர் இயக்குனர் மித்ரன் ஜவஹர். ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனுஷை வைத்து அவர் இயக்கியுள்ள படம் திருச்சிற்றம்பலம்.

இந்த படத்தில் நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர் முக்கிய வேடங்களில் பிரகாஷ்ராஜ் மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.

இதுநாள்வரை திருச்சிற்றம்பலம் படம் குறித்த அப்டேட் மற்றும் புரமோசன் என எதுவும் ஆரம்பிக்க படாமலேயே இருந்தது. இந்த நிலையில் படத்தின் கதாநாயகிகள் மற்றும் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோரின் கதாபாத்திர போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

இந்த படத்தின் கதாநாயகிகள் மூன்று பேருமே தனுஷுடன் முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். இதில் ஷோபனா என்கிற கதாபாத்திரத்தில் நித்யா மேனனும் ரஞ்சனி என்கிற கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கரும் அனுஷா என்கிற கதாபாத்திரத்தில் ராசி கண்ணா நடித்துள்ளனர்.

இதில் ராசி கண்ணா தனுஷின் பள்ளிக்கால தோழியாக நடித்துள்ளார். நித்யா மேனன் தனுஷின் சிறந்த தோழியாக நடித்துள்ளார்.

அப்படி பார்க்கையில் பிரியா பவானி சங்கர் தான் தனுசுக்கு ஜோடியாக இருக்கமுடியும் என்று ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.

தனுஷ் படத்தின் இந்த அடுத்தடுத்த அப்டேட்களால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். இருந்தாலும் தனுஷின் கதாபாத்திர போஸ்டர் குறித்து தங்கள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்