V4UMEDIA
HomeNewsKollywoodமகன்களுடன் கமலை நேரில் சந்தித்த உதயா

மகன்களுடன் கமலை நேரில் சந்தித்த உதயா

கடந்த 2012ல் கமல் நடித்த விஸ்வரூபம் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு சில வருடங்களில் பாபநாசம் திரைப்படம் வெளியாகி கமலுக்கு வெற்றிப்படமாக அமைந்தாலும் அது ரீமேக் படம் என்பதால் அதன் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்தது.

ஆனால் விஸ்வரூபம் படம் ரசிகர்களை கவர்ந்து அதிரடியாக வெற்றி பெற்றது போல தற்போது வெளியாகி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் படமும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் கமலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் உதயா தனது மகன்கள் ஜேசன் மற்றும் சச்சின் ஆகியோருடன் கமலை நேரில் சந்தித்து விக்ரம் படத்தின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Most Popular

Recent Comments