Home News Kollywood சிவகார்த்திகேயனை இளவரசன் ஆக்கிய தெலுங்கு திரையுலகம்

சிவகார்த்திகேயனை இளவரசன் ஆக்கிய தெலுங்கு திரையுலகம்

தெலுங்கு திரையுலகில் பிரின்ஸ் என்றாலே அது இளம் முன்னணி நடிகரான மகேஷ்பாபுவைத்தான் தான் குறிக்கும். இந்த நிலையில் தெலுங்கு திரையுலகம் எப்படி சிவகார்த்திகேயனை இளவரசன் ஆக்கியுள்ளது என்ற கேள்வி எல்லாம் எழுப்ப வேண்டாம். முதன்முதலாக அவர் தெலுங்கில் நடித்துவரும் படத்திற்கு தான் பிரின்ஸ் என்று பெயரிட்டு உள்ளார்கள். தெலுங்கு இயக்குனர் அனுதீப் இந்த படத்தை இயக்கி வருகிறார் நடிகை மரியா ரிஷபோப்ஷ்கா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஏற்கனவே விஜய், தனுஷ் ஆகியோர் முதன்முதலாக தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்து தெலுங்கு இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார்கள். இதில் தனுஷ் படத்திற்கு வாத்தி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஜய் நடிக்கும் படத்திற்கு இன்னும் டைட்டில் அறிவிக்கப்படவில்லை.

ஆனால் இவர்கள் இருவரின் படத்திற்கு பின்னதாக அறிவிக்கப்பட்ட சிவகார்த்திகேயன் படத்திற்கு தற்போது பிரின்ஸ் என டைட்டில் வைத்துள்ளார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் விஜய்,, தனுஷ் ஆகியோரின் தெலுங்கு படங்களுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த தெலுங்கு படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாக இருக்கிறது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டதுதான்.