தமிழ் திரையுலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் திரையுலகில் காதலிக்கும் நட்சத்திர ஜோடி எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்கிற ஒரு கேள்வியை அவ்வப்போது சில ஜோடிகள் எழுப்பும் விதமாக நடந்துகொள்வார்கள். ஆர்கே செல்வமணி-ரோஜா, சுந்தர்சி-குஷ்பூ, சூர்யா-ஜோதிகா என நட்சத்திர ஜோடிகள் பல வருடங்கள் காதலித்து அதன்பின்னரே திருமண பந்தத்தில் இணைந்து இன்று வெற்றிகரமான தம்பதிகளாக வலம் வருகிறார்கள்.
அதே பாணியில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்க வைத்த நட்சத்திர ஜோடி தான் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும். நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா நடித்தபோது, இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பெரும்பாலும் சினிமாவில் இப்படிப்பட்ட காதல் ஏதோ சில மனவருத்தங்களால் முறிந்து போவதும் வழக்கம்தான். ஆனால் இந்த காதல் ஜோடி தங்களது காதலை வலுவாக்கி இதோ இன்று வெற்றிகரமாக திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
இந்த திருமண நிகழ்வில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, கார்த்தி, ஹரி, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட சில திரையுலக முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
விரைவில் சென்னையில் நண்பர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்துகொள்ளும் விதமாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்த நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.