V4UMEDIA
HomeNewsKollywood360 டிகிரியில் கமல் தெறிக்க விட்டுள்ளார் ; விக்ரம் பார்த்து பிரமித்த ஷங்கர்

360 டிகிரியில் கமல் தெறிக்க விட்டுள்ளார் ; விக்ரம் பார்த்து பிரமித்த ஷங்கர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் கமல் ரசிகர்கள் மட்டுமல்லாது ஆக்சன் பிரியர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. திரையிட்ட இடங்களிலெல்லாம் வசூல் மழையை சந்தித்துவரும் இந்த படம் திரையுலக பிரபலங்களையும் பிரமிக்க வைக்க தவறவில்லை. நடிகை திரிஷா இந்த படத்தை இரண்டாவது முறை பார்ப்பதற்கு தியேட்டருக்கு சென்றிருக்கிறார் என்றால் இதன் தாக்கம் எத்தகையது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

மற்ற பிரபலங்கள் யாரையும் விட இந்த படத்தால் மிகவும் ஈர்க்கப்பட்ட, இந்தப் படத்தின் ரிசல்ட்டை ஆவலுடன் எதிர்பார்த்த முக்கியமான நபர் இயக்குனர் ஷங்கர். ஏற்கனவே கமலை வைத்து இந்தியன் படத்தை இயக்கிய ஷங்கர் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவரை வைத்து இந்தியன்2 படத்தை ஆரம்பித்தார். சில நாட்கள் படப்பிடிப்புக்குப் பிறகு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றபடி இருக்கிறது.

கமலும் அரசியல், பிக்பாஸ் என சென்று விட்டதால் இந்தியன் 2 படத்தை மீண்டும் தொடங்கினால் அதற்கு வரவேற்பு இருக்குமா என்ற சந்தேகம் நிச்சயமாக ஷங்கருக்கு இருக்கத்தான் செய்திருக்கும். அதனாலதான் அந்த படத்தை அப்படியே விட்டு விட்டு தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர்.

இந்த நிலையில் கமலுக்கு ஒரு கம்பேக் கொடுத்து இருப்பது போல வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கருக்கு தற்போது இந்தியன் 2 படத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்து விட்டது என்று சொல்லலாம். இந்த படத்தை பார்த்துவிட்டு கமல் 360 டிகிரியில் தனது நடிப்பால் எரித்துள்ளார் என்று தனது பிரமிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஷங்கர். மற்றும் லோகேஷ் கனகராஜ், விஜய்சேதுபதி, பஹத் பாஸில் உள்ளிட்ட அனைவருக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் ஷங்கர்.

Most Popular

Recent Comments