V4UMEDIA
HomeNewsKollywoodO2 படத்தின் ஆக்ஸிஜனே நயன்தாரா தான் படக்குழு பெருமிதம்

O2 படத்தின் ஆக்ஸிஜனே நயன்தாரா தான் படக்குழு பெருமிதம்

ஒரே இடத்திற்குள் நகரும் கதையை கிட்டத்தட்ட 2 மணி நேர படமாக போரடிக்காமல் சொல்வது என்பது மிகப்பெரிய கலை. ஒரு சிலர் அதை திறம்பட செய்து முடிக்கிறார்கள். விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கும் O 2 என்கிற படத்தின் இயக்குனர் ஜி எஸ் விக்னேஷும்  இந்த வகையைச் சேர்ந்தவர் தான். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். அவரது மகனாக மாஸ்டர் ரித்விக் நடித்துள்ளார்.

மலைப்பாதையில் விபத்தில் சிக்கிக்கொள்ளும் ஒரு பேருந்தில் நயன்தாராவும் அவரது மகனும் மாட்டிக் கொள்கின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் ஆக்சிஜன் லெவல் குறைய ஆரம்பிக்கிறது. சுவாசப் பிரச்சனை காரணமாக நயன்தாராவின் மகன் எப்போதும் சுவாசக் கருவியை முகத்தில் அணிந்தபடி இருக்கிறான். தனது தேவைக்காக அதை கைப்பற்ற துடிக்கிறார் பேருந்தில் பயணிக்கும் ஒரு காவல் அதிகாரி. அவரிடமிருந்து தனது மகனை சாமர்த்தியமாக எப்படி காப்பாற்றுகிறார் நயன்தாரா என்பதுதான் இந்த படத்தின் கதை.

ஒரு பேருந்துக்குள் ஒரு படத்தை முடித்து விட முடியுமா என்கிற சந்தேகம் நமக்கு ஏற்படுவது போல படத்தின் தயாரிப்பாளர் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்ஆர் பிரபுவுக்கோ அல்லது கதையை கேட்டு நயன்தாராவுக்கோ ஏற்படவில்லை. இந்த கதையை இயக்குனர் ஜிஎஸ் விக்னேஷ் சொன்னதும் இருவருமே உடனே சம்மதம் சொல்லி விட்டார்கள். அந்த அளவுக்கு இந்தக் கதையின் மீது அவர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

படக்குழுவினர் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது கூட இந்த O 2 படத்தின் ஆக்சிஜனே நயன்தாராதான் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டனர். இப்படி ஒரு கதையம்சமே இந்த படம் எப்படி எடுக்கப்பட்டிருக்கும் என பார்க்கும் ஆவலை தூண்டியுள்ளது என்றால் மறுப்பதற்கில்லை.

Most Popular

Recent Comments