V4UMEDIA
HomeNewsKollywoodதிருமண நேர்த்திகடன் ; ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த ஆதி - நிக்கி ஜோடி

திருமண நேர்த்திகடன் ; ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த ஆதி – நிக்கி ஜோடி

திரையுலகில் ஒரு படத்தில் இணைந்து நடிக்கும் நாயகன் நாயகி இருவரும் காதல் வசப்பட்டு பின்னர் திருமணம் செய்து கொள்வது அவ்வப்போது திரையுலகில் நடக்கும் ஒரு விஷயம்தான். அப்படி லேட்டஸ்டாக திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி தான் நடிகர் ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும்.

யாகவராயினும் நாகாக்க என்ற படத்தில் இணைந்து நடித்த இவர்கள் அடுத்ததாக மரகதநாணயம் என்கிற படத்திலும் சேர்ந்து நடித்தார்கள். அப்போது இருவரும் காதல் வயப்பட்டாலும் கூட அதை வெளிப்படுத்தாமல் நட்பு என்கிற பெயரிலேயே பழகி வந்தனர். கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் ஆன நிலையில் தங்களது காதலை நிச்சயதார்த்தம் மூலம் திருமண பந்தமாக சமீபத்தில் மாற்றினர்.

 இந்த நிலையில் தங்களது திருமணம் சிறப்பாக நடைபெற்றதைத் தொடர்ந்து ஒரு நேர்த்திக்கடனாக தமிழகத்தில் உள்ள பல நகரங்களில் கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல் அன்னதானம் செய்து உள்ளது இந்த புது திருமண ஜோடி.

Most Popular

Recent Comments