V4UMEDIA
HomeNewsKollywoodவிழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள்

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள்

வருகின்ற ஜூன் 22 அன்று பிறந்தநாள் காணும் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 70 கிளை மன்றம் திறப்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன் முதல் கட்டமாக இன்று ஞாயிறு கிழமை 05.06.2022 அன்று 24 கிளை மன்றங்கள் திறக்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி N.ஆனந்த் EXMLA அவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். 

இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகள் ஒன்றியம் நகரம் மற்றும் இளைஞரணி தொண்டரணி நிர்வாகிகள் ரசிகபெருமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர் .

மேலும் பொதுமக்களுக்கு புடவைகள் , பிளாஸ்டிக் குடங்கள் , மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் , டிபன் பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டது .

Most Popular

Recent Comments