தமிழ் திரையுலகில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வரும் சுபகாரியம் எதுவென்றால் ஒரு பக்கம் விஷால் திருமணம், இன்னொரு பக்கம் நயன்தாரா திருமணம்.. இதில் விஷால் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்துவிட்டு தான் திருமணம் என கூறிவிட்டார். நயன்தாராவோ தனது திருமணத்தை தள்ளிப்போட்டு கொண்டே வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவரது காதலர் விக்னேஷ் சிவன் காத்துவாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தை இயக்கி முடித்ததும் இவர்கள் இருவரும் கல்யாணத்திற்காக வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த வகையில் ஒரு வழியாக ஜூன் 9ஆம் தேதி இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு சென்னையில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும். இந்த சந்திப்பின்போது உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்துள்ளார்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி அவர்களது குடும்பத்தினர் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள் என குறைந்த அளவு நபர்கள் முன்னிலையில்தான் நடைபெற இருக்கிறது.

அதேசமயம் இத்தனை வருட காலமாக நயன்தாராவின் ரசிகர்களாக இருப்பவர்களுக்கு அவரது திருமணத்தை பார்க்கும் ஆசை இருக்கத்தானே செய்யும். அந்த வகையில் நயன்தாராவின் திருமணத்தை வீடியோவாக எடுத்து அதை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

இந்த திருமண வைபவத்தை முழுவதும் படமாக்கும் பொறுப்பு இயக்குனர் கௌதம் மேனன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.