இயக்குனர் ஷங்கரின் சீடராக பணியாற்றிவிட்டு ராஜாராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ அதைத்தொடர்ந்து தான் இயக்கிய மூன்று படங்களிலுமே விஜய்யை ஹீரோவாக வைத்து தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்தார்.
அந்த அளவிற்கு விஜய்யின் ஆஸ்தான ஹீரோவாக இயக்குனராக மாறிய அட்லீக்கு அடுத்த ஜாக்பாட் வாய்ப்பாக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு தேடி வந்தது. இந்த நிலையில் தற்போது
இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அட்லியின் முந்தைய பிகில் படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாரா தான் இந்த ஜவான் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
கையில், தலையில் புத்தூர் கட்டு போடப்பட்டது போல ஷாருக்கான் அமர்ந்திருக்கும் அந்த போஸ்டரே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. அட்லி பாலிவுட்டிலும் தனது கொடியை நாட்டுவார் என எதிர்பார்க்கலாம்.