V4UMEDIA
HomeNewsKollywoodவாசுவின் கர்ப்பிணிகளுக்காக கதாநாயகனாக மாறிய கோபிநாத்

வாசுவின் கர்ப்பிணிகளுக்காக கதாநாயகனாக மாறிய கோபிநாத்

விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்தவர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ.

இவர் அடுத்ததாக மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டுக்குள் செல்லாமல் அழகிய கண்ணே என்கிற சிம்பிளான படம் ஒன்றை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது பிறந்தநாளை முன்னிட்டு இவர் தயாரித்து வரும் இன்னொரு படமான வாசுவின் கர்ப்பிணிகள் என்கிற படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் விஜய் டிவி நீயா நானா புகழ் கோபிநாத். ஏற்கனவே ஒன்றிரண்டு படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தார் கோபிநாத். இப்போது கதாநாயகனாக புரோமோஷன் பெற்றிருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக அறிமுகமான பென்சில் திரைப்படத்தை இயக்கிய மணி நாகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகைகள் சீதா, பேபி அனிகா, வனிதா மற்றும் மலையாள நடிகை லேனா என நான்கு பேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ஒரு ஆண் மகப்பேறு மருத்துவரும் அவர் வாழ்வில் சந்திக்கும் நான்கு கர்ப்பிணி பெண்களுக்குமான நிகழ்வுகள் பற்றிய படமாக இது உருவாகி உள்ளது.

Most Popular

Recent Comments