மறைந்த சின்ன கலைவாணர் நடிகர் விவேக் நடித்த படங்களில் தவறாமல் இடம் பெற்று வந்தவர் நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி. ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லை குறைந்தாலும் இவரது மகள் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார். அதன்மூலம் கொட்டாச்சிக்கும் மிகப்பெரிய வெளிச்சம் கிடைத்தது.
இந்த நிலையில் ஏற்கனவே குறும்படம் ஒன்றை இயக்கிய கொட்டாச்சி தற்போது கழுமரம் என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளார்.
இந்தப்படத்தின் ட்ரெய்லரை பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி நாளை வெளியிடுகிறார்
எளிய மனிதனின் வலியையும் வாழ்க்கையையும் இந்த படத்தின் கதையாக கூறியுள்ளாராம் கொட்டாச்சி. இந்த படத்தில் இயக்குனர் பொறுப்பை ஏற்று இருப்பதால் தனது பெயரை கொட்டாச்சி அன்னம் என மாற்றியுள்ளார்.