அவசரப்பட்டு படங்களில் நடிப்பதை விட நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நிதானமாக நடித்து வருபவர் நடிகர் அருள்நிதி. அதனால் தான் அவர் படங்கள் வெற்றியோ தோல்வியோ அதில் ஏதோ ஒரு வித்தியாசமான அல்லது ஒரு சிறப்பம்சம் கட்டாயம் இருக்கும்.
அந்த வகையில் அருள்நிதி நடித்துள்ள தேஜாவு மற்றும் டைரி ஆகிய இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளன.
இந்த நிலையில் புதிய படமொன்றில் நடிக்கும் அருள்நிதி அதற்காக வித்தியாசமான மீசை வைத்து தனது கெட்டப்பை மாற்றி உள்ளார்.
அவரது மீசையை பார்க்கும்போது அவர் சிங்கம் சூர்யா மாதிரி போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறாரா இல்லை சந்தன கடத்தல் வீரப்பன் மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாரா என்று யூகிக்க முடியவில்லை.
இந்த படத்தை கௌதம் ராஜ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜோதிகா நடித்த ராட்சசி திரைப்படத்தை இயக்கியவர். இந்த படத்திற்கு இமான் இசையமைக்க ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார் ஒலிம்பியா பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.