V4UMEDIA
HomeNewsKollywoodஇயக்குனர் ராதாமோகனின் ரூட்டை மாற்றிய பொம்மை

இயக்குனர் ராதாமோகனின் ரூட்டை மாற்றிய பொம்மை

மொழி, அபியும் நானும் என்பது போன்ற உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கியவர் இயக்குனர் ராதாமோகன். இடையில் பயணம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் புதிய பாணியிலான முயற்சியையும் அவர் மேற்கொண்டார். இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது அவர் இயக்கியுள்ள படம் பொம்மை.

ஆனால் இதுவரை அவர் இயக்கிய படங்களில் இருந்து மாறுபட்டு இந்த படத்தை திரில்லர் ஜானரில் இயக்கியுள்ளார் ராதாமோகன். இந்த படத்தில் கதாநாயகனாக எஸ்.ஜே.சூர்யா, கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் என ஏற்கனவே மான்ஸ்டர் படத்தில் இணைந்து வெற்றிக்கொடி நாட்டிய கூட்டணி இதிலும் இணைந்துள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. டிரைலரில் திரில்லர் படங்களுக்கு உண்டான அம்சங்களும் இது எந்த மாதிரியான கதையாக இருக்கும் என யோசிக்க வைக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

அதேசமயம் ஆக்ஷனுக்கும் இந்த படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது. அந்த வகையில் இந்த பொம்மை படத்தின் டிரைலரே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

Most Popular

Recent Comments