சிபிராஜ் நடிப்பில் விரைவில் வெளிவர தயாராகி வரும் படம் மாயோன். இந்த படத்தில் கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மற்றும் முக்கிய வேடங்களில் கேஎஸ் ரவிக்குமார், ராதாரவி ஆகியோர் நடித்துள்ளனர்.

கடந்த 14 வருடங்களுக்கு முன்பு கமல் நடித்த தசாவதாரம் படம் வெளியானது. அந்த படத்தில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற கேள்விக்கு கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும் என கமல் பதில் கூறியிருப்பார்.

அப்போது அவர் கூறிய அந்த வசனத்திற்கு தற்போது மாயோன் படத்தின் மூலம் பதில் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இந்த மாயோன் திரைப்படம் சொல்ல வருவது என்ன, படத்தில் கமல் பேசிய வசனத்திற்கு அப்படி என்ன பதில் இருக்கிறது என்பது குறித்த எதிர்பார்ப்புகளை இப்போதே ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ள மாயோன் திரைப்படம் வரும் ஜூன் 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது.