இசைஞானி இளையராஜா தனது 80 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த 45 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் தனது இசைப்பணியால் ரசிகர்களின் உள்ளங்களை மகிழ்வித்து வரும் மிகப்பெரிய சேவையை செய்து வருகிறார் இளையராஜா. இப்போதும்கூட இளைஞர் போல சுறுசுறுப்பாக படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

தனது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் மிகப்பெரிய இசை நிகழ்ச்சி ஒன்றை அவர் நடத்துவது ஒரு பக்கமிருக்க பெங்களூரைச் சேர்ந்த அவரது இசையை ரசிகரான பார்த்திபன் என்பவர் இளையராஜா ஆந்தம் என்கிற பெயரில் ஒரு பாடலை இசைஞானி பிறந்தநாளுக்காக உருவாக்கி வெளியிட்டுள்ளார் இந்த பாடலை பார்த்திபனே எழுதியுள்ளார் பார்த்திபன் மற்றும் கார்த்திகேயன் இருவரும் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா இந்த பாடலை வெளியிட இசையமைப்பாளர்கள் எஸ் ஏ ராஜ்குமார் மற்றும் வினா விடை பெற்றுக் கொண்டனர்.

இப்பாடல் இசையின் இறைவன் இளையராஜா எனும் தலைப்பிலும் மற்றும் இளையராஜா anthem எனும் தலைப்பிலும் அனைத்து வலைதளங்களிலும் தமிழ் மற்றும் தெலுங்கில் இளையராஜா anthem எனவும் வெளியிடப்பட்டுள்ளது.