அதிரடி ஆக்சன், பரபரப்பு, விறுவிறுப்பு என ஜெட் ஸ்பீடில் தனது படங்களை ரசிகர்களுக்கு விருந்தாக தருபவர் இயக்குனர் ஹரி. அவர் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது நடிகர் அருண்விஜய்யுடன் முதன்முறையாக இணைந்து உருவாக்கியுள்ள படம் தான் யானை.
இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், ராதிகா, ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சேவல் படத்திற்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் ஹரியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் ஜிவி பிரகாஷ். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குனர் ஹரி பேசும்போது, இது வழக்கமான என்னுடைய பாணியில் இருந்து மாறி நான் எடுத்துள்ள படம். இந்த காலகட்டத்தில் நான் பல விஷயங்களை அப்டேட் செய்து கொண்டேன். என்னையும் கொஞ்சம் மாற்றிக் கொண்டேன். பல மொழி இயக்குனர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அப்படி உருவாக்கிய படம்தான் இது. அதேசமயம் ஆக்சன் சென்டிமெண்ட் என எதற்கும் இந்த படத்தில் குறை இருக்காது” என்று கூறினார்