லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய்சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமல்ல படம் குறித்த சில தகவல்களையும் இயக்குனர் மற்றும் கமல் இருவரும் அவ்வப்போது பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்த படத்தில் விஜய்சேதுபதி மற்றும் பஹத் பாசில் இருவரின் கதாபாத்திர பெயர்கள் குறித்த போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதில் அமர் என்கிற கதாபாத்திரத்தில் பஹத் பாசிலும் சந்தானம் என்கிற கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதியும் நடித்துள்ளனர். இதில் விஜய்சேதுபதிக்கு வில்லன் வேடம் என்பது நன்றாகவே தெரிகிறது. அதேசமயம் பஹத் பாசில் வில்லனா, நல்லவரா என்பதை இந்த போஸ்டரை வைத்து யூகிக்க முடியவில்லை. சஸ்பென்ஸ் ஜூன்-3ஆம் தேதி உடையும்.. அதுவரை பொறுத்திருப்போம்.















