V4UMEDIA
HomeNewsKollywoodமீண்டும் ஒரே நாளில் மோதும் கார்த்தி – சிவகார்த்திகேயன் படங்கள்

மீண்டும் ஒரே நாளில் மோதும் கார்த்தி – சிவகார்த்திகேயன் படங்கள்

கொரோனா தாக்கம் எல்லாம் சற்றே ஓய்ந்துள்ள நிலையில் பெரிய ஹீரோக்களின் படங்கள் தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அதில் குறிப்பாக குறைந்த காலகட்டத்தில் அதிக படங்கள் வெளியாகிறது என்றால் அது நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி இருவருக்கு மட்டும்தான்.

கடந்த அக்டோபர் மாதம் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், சமீபத்தில் டான் ஆகிய படங்கள் வெளியாகின. இந்த நிலையில் தெலுங்கில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அவரது இருபதாவது படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கார்த்தி நடித்துள்ள விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என மூன்று படங்களும் இந்த வருடமே இன்னும் நான்கு மாதங்களுக்குள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. அதில் விருமன் படம் ஏற்கனவே ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2019ல் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ, கார்த்தி நடித்த தம்பி என இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகின ஆனால் இரண்டு படங்களுக்கும் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் இருவருக்குமே குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என சரிசமமாக செல்வாக்கு இருக்கும் நிலையில் இருவரின் படங்களும் மீண்டும் ஒரே நாளில் வெளியாவது இந்த இரண்டு படங்களின் மீது எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என பார்க்கலாம்.

Most Popular

Recent Comments