இந்த வருடத்தில் தமிழ் சினிமாவிற்கு ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் கிடைத்திருக்கிறார் என்றால் அது இயக்குனர் செல்வராகவன் தான். விஜய் நடித்த பீஸ்ட், சமீபத்தில் வெளியான சாணிக்காயிதம் ஆகிய படங்களில் தனது இருவிதமான மாறுபட்ட நடிப்பை கொடுத்து இனி திரையுலகத்தில் ஒரு நடிகராகவும் தனது பயணம் இருக்கும் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் செல்வராகவன்.
அதேபோல திரவுபதி மற்றும் ருத்ரதாண்டவம் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மோகன் ஜி அடுத்ததாக இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் செல்வராகவன்.
இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகர் நட்டி நட்ராஜ் நடிக்கிறார். இந்த படத்திற்கு பகாசூரன் என டைட்டில் வைக்கப்பட்டு தற்போது அந்தப் படத்தின் டைட்டில் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட இயக்குனரின் முந்தைய படங்களைப்போல இந்தப் படத்திலும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம்.