V4UMEDIA
HomeNewsKollywoodரஜினி விஜய் தான் என்னுடைய ரோல்மாடல் ; லெஜெண்ட் சரவணன் பெருமிதம்

ரஜினி விஜய் தான் என்னுடைய ரோல்மாடல் ; லெஜெண்ட் சரவணன் பெருமிதம்

அனைவருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் முதலாளியாக ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் லெஜெண்ட் சரவணன். இவர் ஏற்கனவே தனது கடையின் விளம்பர படங்களில் நடித்து ஒரு நடிகராக பொதுமக்களிடம் பட்டிதொட்டியெல்லாம் அறிமுகமாகியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது முதன்முறையாக லெஜண்ட் என்கிற படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக ஊர்வசி ரவுட்டேலா நடித்துள்ளார். மற்றும் விவேக், பிரபு, யோகிபாபு என பல பிரபல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்தநிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவை நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப்பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார் லெஜெண்ட் சரவணன். இந்த விழாவில் தமன்னா, பூஜா ஹெக்டே, ராய்லட்சுமி என பல முன்னணி நடிகைகள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

லெஜெண்ட் சரவணன் பேசும்போது சினிமாவில் எனது ரோல் மாடல் என்றால் ரஜினி விஜய் இருவரும் தான். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இன்னொரு படத்திலும் நடிக்கும் எண்ணத்தில் இருக்கிறேன் என்று கூறினார்.

இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது இதில் லெஜண்ட் சரவணன் விஞ்ஞானியாக நடித்துள்ளார். ஊர் மக்களுக்கு தனது கண்டுபிடிப்புகள் மூலம் ஏதாவது நல்லது செய்ய நினைக்க. அதை தடுக்க ஒரு கூட்டமே முயற்சிப்பதும். பின்னர் அதிரடி ஆக்ஷன் அவதாரம் எடுத்து. தான் செய்ய நினைத்ததை அவர் செய்வதும் தான் கதை என்று புரிகிறது. கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சிவாஜி படத்தின் பாணியிலேயே இந்த படம் இருக்கும் என்று தெரிகிறது.

Most Popular

Recent Comments