பொதுவாகவே முன்னணியில் இருக்கும் இரண்டு ஹீரோக்கள் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் இயல்பாகவே அந்தப் படத்தின் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டுவிடும். அந்த வகையில் தனித்தனி பாதையில் பயணித்து வரும் அருண் விஜய்யும் விஜய் ஆண்டனியும் இணைந்து நடித்துள்ள படம்தான் அக்னி சிறகுகள்.
மூடர்கூடம் என்கிற தனது முதல் படத்திலேயே கவனிக்க வைத்த இயக்குனர் நவீன் இந்த படத்தை இயக்கியுள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் சிவா இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் டீசரை தற்போது நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்
டீசரை பார்க்கும்போது கிட்டத்தட்ட ஹாலிவுட் பாணியில் உருவாகி இருந்தது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இரண்டு ஹீரோக்களும் இரண்டு கிளாடியேட்டர் போல இந்த டீஸரில் சித்தரிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக டீசர் முழுவதும் பேசும் அருண்விஜய்யின் பின்னணி குரல் நிச்சயமாக இந்த படத்தில் ஏதோ இருக்கிறது என்கிற ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது.
அதிரடி சண்டைக்காட்சிகளும் ஹெலிகாப்டரில் பறந்துகொண்டே சண்டை போடும் சாகசக் காட்சிகளும் கார் சேஸிங் காட்சிகளும் என விறுவிறுப்புக்கு சற்றும் குறையாத படமாகத்தான் இது உருவாகி உள்ளது.
பெயர்தான் அக்னிச்சிறகுகளே தவிர, படம் பக்கா ஆக்சன் சிறகுகளாக தான் இருக்கும் என்பது நன்றாகவே தெரிகிறது