மலையாளத்தில் இதுவரை நேரம், பிரேமம் என இரண்டு படங்களை மட்டுமே இயக்கியவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். ஆனால் பிரேமம் படத்தின் மூலமாக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் இயக்குனராக மாறிவிட்டார் அல்போன்ஸ்.

அதனால்தானோ என்னவோ கடந்த ஏழு வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் ரசிகர்களை எதிர்பார்ப்பிலேயே வைத்து வந்த அல்போன்ஸ் புத்திரன் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது மலையாளத்தில் பிரித்திவிராஜ், நயன்தாரா நடிப்பில் கோல்டு என்கிற படத்தை இயக்கி முடித்து ரிலீசுக்கு தயார் செய்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கமல் நடித்துள்ள விக்ரம் படத்திற்கு வாழ்த்துக்களை கூறியுள்ளதுடன் தமிழின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவருக்குமே தனித்தனியாக கதைகள் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஒருமுறை இவர்கள் இருவரையும் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் தனது கதை மூலமாக அவர்களை வசீகரித்து அவர்களின் சம்மதத்தையும் பெற்றுவிடுவேன் என்று நம்பிக்கையாகவும் கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.
ஆனால் அப்படி அவர்களை சந்திக்க அதிர்ஷ்டம் வேண்டும் என்றும் இதுவரை அதிர்ஷ்டம் என்கிற டிக்சனரியில் தனது பெயர் இடம்பெறவில்லை என்றும் வருத்தத்துடன் கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.

அப்படி ரஜினி கமல் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் இதுவரை அவர்களது ரசிகர்கள் கண்டிராத புதிய அனுபவத்தை கொடுக்கும் படங்களாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் .